Skip to main content

பாசிச ஆட்சியாளர்களை எதிர்க்க கல்வியே ஆயுதம்! காங்கிரஸ் கட்சி சிறுபான்மை பிரிவு அறிக்கை!

Published on 25/05/2019 | Edited on 25/05/2019

தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழக சிறுபான்மை பிரிவின் மாநில தலைவர் அஸ்லம் பாஷா அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில்,

 

 


மீண்டும் பிஜேபி ஆட்சிக்கு வருவதை குறித்து இஸ்லாமிய மற்றும் கிருத்துவ சிறுபான்மை சமூகம் பெரும் கவலை அடைந்து இருக்கலாம். கடந்த 5 ஆண்டுகால பிஜேபி ஆட்சியில் இக்லாக் படுகொலை, ஜுனைத் படுகொலை போன்ற கொடூர சம்பவங்கள் இந்த கவலைக்கு முக்கிய காரணமாக இருக்கும். ஆனால் இதே 5 ஆண்டுகால பிஜேபி ஆட்சியில் நடந்த மற்றொறு சம்பவத்தையும் நினைவுகூறுவோம்.

 

education

 

முஹமது முஹ்ஸீன் என்ற முஸ்லீம் ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிடுகின்றார், பிரதமர் உடனே அவரை பணியிலிருந்து சஸ்பென்ட் செய்கிறார், ஒரு வாரத்தில் அந்த முஸ்லீம் அதிகாரி சஸ்பென்ட் உத்தரவை நீதிமன்றம் மூலம் ரத்து செய்து ஐ.ஏ.எஸ் அதிகாரியாக மீண்டும் பணியாற்றிவருகின்றார்.



கல்வி அறிவை வளர்த்து கொண்டு அரசு அதிகாரியாக இருக்கும் ஒரு இஸ்லாமிய சிறுபான்மை சமூதாயத்தை சேர்ந்தவரை பிரதமராக இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. பத்துபைசா பிரயோஜனம் இல்லாத ரவுடிகளால் இஸ்லாமிய மற்றும் கிருத்துவ சிறுபான்மை மக்களை துன்புறுத்தப்படுகிறதென்றால் இந்த சமூகம் கல்வியிலும் அரசு பணியிலும் பின் தங்கியிருப்பது மிக முக்கிய காரணம், கல்வி கற்று அரசு அதிகாரியாக இருந்தால் இந்த ரவுடிகள் தாக்க முற்படுவார்களா ?



சிறுபான்மை சமூகமாக இருப்பதினால்தான் இஸ்லாமிய சமூகம் துன்புறுத்தப்படுகின்றது என்ற வாதம் ஏற்புடையதல்ல. இஸ்லாமியர்களைவிட சிறுபான்மையாக இருக்கும் சமூகங்கள் இந்தியாவில் இஸ்லாமியர்களை போல் துன்புறுத்தப்படுவதில்லை. இதற்கான காரணத்தை ஆராய்ந்தால் அந்த சமூகங்கள் கல்வியில் முன்னேறி, அரசு பணிகளில் பெரும் பங்காற்றுவதை அறியலாம்.

 


மத்திய கிழக்கில் யூதர்கள் சிறுபான்மையினர்தான், பெரும்பான்மை அரபுகளால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஹிட்லரால் துன்புறுத்தப்பட்ட யூத சமூகம் இன்றைக்கு உலகின் சக்திவாய்ந்த சமூகமாக இருக்கிறதென்றால் அறிவியல், தொழில்நுட்பத்தில் அவர்களின் அறிவு வளர்ச்சி தான் காரணம்.

 


ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆனால்தான் பாதுகாப்பு கிடைக்குமா ? அப்படி என்றால் எல்லோரும் முஹமது முஹ்ஸீன் போல் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக முடியுமா ? இது நடைமுறை சாத்தியமா ? என நீங்கள் நினைக்கலாம். அரசு துறையில் தன் சதவீதத்திற்கு ஏற்ற பங்களிப்பு இஸ்லாமிய சமூகத்திற்கு போதுமானது, இது இஸ்லாமிய மற்றும் கிருத்துவ சிறுபான்மை மக்களை அநியாயமாக தாக்க நினைக்கும் ரவுடிகளை உளவியல் ரீதியாக தடுக்கும்.

 



உண்மையில் தற்போது முஸ்லீம்கள் மீது நடத்தபடுவது உளவியல் ரீதியிலான தாக்குதல்தான். ஒரு சில இஸ்லாமியர்களை துன்புறுத்தி, கொலை செய்து அதை வீடியோ எடுத்து இந்தியா முழுவதும் பரப்புகின்றார்கள், இதைபார்க்கும் முஸ்லீம்கள் அச்சப்பட வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம், உண்மையில் நம்மை சுற்றி இருக்கும் அனைவரும் நம்மை தாக்க போவதில்லை, ஆனால் தாக்கபடுவோம் என்ற பயத்தை உளவியல் ரீதியாக முஸ்லீம் சமூகத்திற்கு ஏற்படுத்துகின்றனர், இந்த பயம் தான் இஸ்லாமியர்களை இயல்பாக கல்வி கற்பதையும், தொழில் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவதையும் தடுக்கும்.



இதை உளவியல் ரீதியாக எளிதாக வெல்லாம், ஆனால் இஸ்லாமிய சமூகம் இப்படிபட்ட சம்மபவங்களை அறிவுபூர்வமாக அணுகாமல் உணர்வுபூர்வமாக அணுகி, சூழ்சியில் வீழ்ந்துவிடுகின்றது.

 



இஸ்லாமிய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் செய்தி தான் சென்றடைய வேண்டுமே தவிர, இஸ்லாமியர்களை பயமுறுத்தும் செய்தி அல்ல. இதை இஸ்லாமிய சமூகம் உணர வேண்டும். ஒரு செய்தியை பரப்பும் முன் இது இஸ்லாமிய மாணவர்களை உளவியல் ரீதியாக எவ்வாறு பாதிக்கும் என சிந்தித்து செயல்படுங்கள்.

 



காங்கிரஸ் கட்சியினால் பிஜேபியை வீழ்த்துவது கடினமல்ல, இருந்தாலும் இஸ்லாமிய மாணவர்கள் தான் கல்வியில் கவனம் செலுத்தி அரசு பணியில் அமர்வதற்கான போட்டி தேர்வுகளில் வெல்லும் அளவிற்கு தங்களை தயார்படுத்திகொள்ள வேண்டும். தனியார் துறைகளில் உள்ள உயர்பதவிகளில் அமர்ந்து பொது சமூகத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான மன நிலையை மாற்றி , பிரித்தாளும் சூழ்சியை முறியடிக்கும் அளவிற்கு தங்களின் கல்வி அறிவையும் , திறமையையும் வளத்துகொள்ள வேண்டும்.வியாபார துறையில் விருப்பம் உள்ள மாணவர்களும் அறிவியல், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்கால வியாபார சந்தையை தமதாக்க முயலவேண்டும்.

 



இஸ்லாமிய மற்றும் கிருத்துவ சிறுபான்மை சமூகத்தின் முன் தற்போதுள்ள ஒரே வழி கல்வி அறிவு சார்ந்த வளர்ச்சியை நோக்கி பயணிப்பதுதான். இவ்வார் அவர் கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்