கைதிக்கு செல்போன் கொடுத்து பேச அனுமதித்த புகாரில் இரு காவலர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த புகழ் இந்திரா என்பவர் வீட்டை லீஸுக்கு விடுவதாக விளம்பரம் செய்து, ஒரே வீட்டை பத்துபேருக்கு லீஸுக்கு விட்டு ரூ. 10 லட்சம் வரை வசூல் செய்திருந்தார். பாதிக்கப்பட்ட நபர்கள், புகழ் மீது மதுரை புதூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி புகழை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இதற்காக சிறையில் இருந்த புகழை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய போலீஸார் அழைத்துசென்றனர். அப்போது அவர் செல்போனில் யாரோ ஒருவரிடம் பேசிய காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. அதனைத் தொடர்ந்து மதுரை காவல்துறை ஆணையரின் உத்தரவில் பேரில், தலைமை காவலர் சுரேஷ் மற்றும் காவலர் அய்யனார் ஆகியோர் தற்போது பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.