Skip to main content

தமிழகம் வரும் பிரதமர்... ட்ரோன்கள் பறக்க தடை!  

Published on 26/07/2022 | Edited on 26/07/2022

 

nn

 

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு வெகு விமர்சையாக செய்துவருகிறது. தமிழ்நாடு முழுவதும் செஸ் ஃபீவரை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் அந்த ஃபீவர் கொஞ்சம் கூடுதலாக உள்ளது. சென்னையில் திரும்பு இடங்கள் எல்லாம் செஸ் ஒலிம்பியாட் குறித்தான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் அந்த துவக்க விழாவிற்காக நேரு உள்விளையாட்டு அரங்கு தயாராகி வருகிறது.

 

இந்நிலையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக  பிரதமர் மோடி தமிழகம் வர இருக்கும் நிலையில் அதற்கான பாதுகாப்பு பணிகளை தமிழக காவல்துறை தீவிரப்படுத்தி வருகிறது. அன்றைய தினம் 5 அடுக்கு பாதுகாப்புடன் சுமார் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நிகழ்ச்சி நடைபெறும் இடம், சென்னை விமான நிலையம், ஆளுநர் மாளிகை என மொத்தம் 5 இடங்களில் பாதுகாப்பு பணிகளில் போலீசார் ஈடுபட உள்ளனர். சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜூலை28 மற்றும் 29 ஆம் தேதிகளில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்