Skip to main content

சட்டப்பேரவையில் ஜெயலலிதாவையே எதிர்த்து குரல் எழுப்பியவர் விஜயகாந்த்- பிரேமலதா பேட்டி

Published on 08/03/2019 | Edited on 08/03/2019

இன்று கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில்,

 

கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை குழப்பமும் இல்லை. இன்னும் ஓரிரு நாட்களில் தேமுதிக தேர்தல் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் அறிவிக்கப்படும்.

 

dmdk

 

திமுக பொருளாளருக்கு துரைமுருகனுக்கு, தேமுதிக பொருளாளராக பதில் சொல்கிறேன். 

 

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் இது, வீட்டிற்கு வருவது எதிரியாக இருந்தாலும் அவர்களை உபசரித்து அனுப்புவதுதான் தமிழர் பண்பாடு. எதோ ஒரு காரணத்திற்காக அவர்கள் உங்கள் வீட்டுக்கு வந்ததாகவே இருக்கட்டும். நீங்கள் சீனியர் அரசியல்வாதிதானே வயதில் பெரியவர்தானே , அவர்கள் உள்ளே போகும்பொழுது ப்ரெஸ் மீடியா எதுவும்  இல்லை ஆனால் அவர்கள் வெளியில் வரும்போது மட்டும் எல்லா ப்ரெஸ் மீடியாவும்  எப்படி வந்தார்கள். நீங்கள் ஒரு பெரிய மனிதர் என்று நம்பித்தானே உங்கள் வீட்டிற்கு வந்தார்கள் ஆனால் நீங்கள் காட்டும் நம்பிக்கை இதுதானா? இதுதான் என் முதல் கேள்வி.

 

முதலில் துரைமுருகன் அவர்கள் அவங்க கட்சியை பற்றி சுதீஷிடம் என்ன சொன்னார் என்ற விளக்கத்தை கொடுக்கட்டும்.

 

ஆரம்பத்திலிருந்தே திமுக என்றால் தில்லுமுல்லு கட்சி என இன்றல்ல, நேற்றல்ல எப்பவுமே இதை நான் உரத்த குரலில் சொல்வேன். இன்று பெரிய மனிதர் என்று அவர் வீட்டுக்கு போனால் இப்படித்தான் கேவலப்படுத்துவதா. வீட்டுக்கு ஒருவரை வரவைத்து தான் நீங்கள் அரசியில் ஆதாயம் தேட வேண்டுமா?. இதைவிட அநாகரீகம் உண்டா.

 

 

ஸ்டாலின் ஒருநாள் விஜயகாந்தை பார்க்க வந்தார். நாங்கள் நினைத்தால் அதை தடுக்கமுடியதா? இதே கலைஞர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த போது அவரை சந்திக்க விஜயகாந்த்தான் முதலில் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் ஸ்டாலின் கடைசி அவரை சந்திக்க அனுமதி கொடுக்கவில்லை. ஆனால் அதையெல்லாம் நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 

 

விஜயகாந்த்தை சந்தித்த பிறகு ஸ்டாலின் வெளியில் போய் என்ன பேட்டிக்கொடுத்தார், நான் உடல்நலம் விசாரிக்கத்தான் வந்தேன் என கூறினார். இருதலைவர்கள் பேசும்போது அரசியல் பேசுவது எதார்த்தம் என நான் கூறியிருந்தேன். அதை தவிர வேறுஏதும் நான் சொல்லவில்லை.

 

நேற்று துரைமுருகன் என்ன சொன்னார், அவர்கள் யாரென்றே தெரியாது என்றார். முன்னபின்ன தெரியாத நபரை துரைமுருகன் வீட்டுக்குள்ள விட்டுடுவாரா? இந்த கேள்விக்கு எனக்கு பதில் தெரியணும். நானும் வேலூரை சேர்ந்தவர்தான். வேலூரை சேர்ந்தவர்கள் இவ்வளவு கீழ்த்தரமான அரசியல் செய்வார்களா என துரைமுருகனை பார்த்ததுதான் தெரிந்துகொள்கிறேன்.

 

 

துரைமுருகன் உட்கார்ந்த இடத்தியிலேயே தூங்குவார் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருவேளை வயது மூப்பில் தூக்கத்தில் துரைமுருகன் பேசினாரா எனக்கு சந்தேகம் வருகிறது. சரி அவர்கள் பக்கமே வருகிறேன், அவர்கள் கூட்டணி பற்றித்தான் பேச வந்தார்கள் என்றே வைத்துக்கொள்ளுங்கள். ஒரு சீனியர் அரசியல்வாதி என்ன செய்யவேண்டும் டீசண்டாக பேசி அவர்களை அனுப்பிவைக்க வேண்டுமே தவிர உள்ளே கூப்பிட்டுவிட்டு வெளியே மொத்த மீடியாவையும் வரவைத்து அரசியல் ஆதாயம் தேடுவது அநாகரீகமான செயல் அல்லவா. 

 

(தொடர்ந்து பதிலளித்து கொண்டிருந்த பிரேமலதா செய்தியாளர்களின் கேள்விக்கு நீ, வா,உனக்கு என்று ஒருமையில் பேசினார் இதனால் செய்தியாளர்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது)

 

யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு நன்மை செய்யவில்லை என்றால் தேமுதிக தட்டிகேக்கும். விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வாரா இல்லையா என பொறுத்திருந்து பாருங்கள். ஒரு கட்சி மீது விமர்சனம் வைத்தால் கூட்டணி வைக்கமாட்டோம் என்று அர்த்தமில்லை, சட்டப்பேரவையிலே ஜெயலலிதாவை எதிர்த்து குரல் எழுப்பியவர்தான் விஜயகாந்த். தப்பு நடந்தால் யாராக இருந்தாலும் நாங்கள் கேட்போம் என்றார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்