Published on 12/03/2019 | Edited on 13/03/2019
புதுச்சேரி லாஸ்பேட்டை கிருஷ்ணா நகர் 20-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயமேரி(45). இவரது மகன் அமலோற்பவ நாதன். 4 தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் தாய் ஜெயமேரியை மகன் அமலோற்பவநாதன் கொலை செய்துள்ளார். இன்று அவர் உருளையன்பேட்டை காவல் நிலையத்துக்கு சென்றார். ஆனால் கொலை நடந்த இடம் லாஸ்பேட்டை பகுதிக்கு உட்பட்டது என்பதால் அவரை லாஸ்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணை நடத்தியதில் குடும்ப தகராறில் தாயை 4 தினங்களுக்கு முன் கொன்று விட்டு ஓட்டலில் சாப்பாடு வாங்கி வந்து வீட்டில் சாப்பிட்டு வந்துள்ளார். பிணம் துர்நாற்றம் வீசியதால்தான் காவல் நிலையம் சென்று குற்றத்தை மகன் ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.