Skip to main content

கர்ப்பிணி யானை பலி; கண்டுகொள்ளாத வனத்துறை!

Published on 15/10/2020 | Edited on 15/10/2020

 

Pregnant elephant passes away

 

நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை நெடிந்து செல்கிற அம்பை, மணிமுத்தாறு, கல்லிடைக்குறிச்சியின் பொட்டல் உள்ளிட்ட மலையோரங்களில் அடர்ந்த வனக்காடுகள் புலிகள் வனக்காப்பகமான முண்டன்துறை வனச்சரணாலயத்துடன் யானைக் கூட்டங்களும் வசிக்கின்றன. மனிதனை மறைந்து தாக்குகிற கரோனா யுகத்தில் அதுவும் அதன் வைரசுக்குக் கொண்டாட்டமான குளிர்ந்த வனப்பகுதியில் மனித நாடமாட்டமும் இல்லை. வனத்துறையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் அலட்சியம் தொய்வு காணப்படுகிறது என்கிறார்கள் மலையோர மணிமுத்தாறு வாசிகள்.

 

இதனை குறித்து அவர்களிடம் பேசுகையில், மலையடிவாரத்தையொட்டிய கல்லிடைக்குறிச்சியின் பொட்டல் சுற்று வட்டாரத்தில் கடந்த ஒரு வாரமாக மெலிந்து சோர்வான நிலையில் நடக்க முடியாமல் தவித்த பெண் யானை ஒன்று உணவும் அருந்தாமல் ஆங்காங்கே படுத்தபடியும், இளைப்பாறலுக்குப் பின்பு மெல்ல நடந்தபடி அந்தப் பகுதியைச் சுற்றி வந்தது. தள்ளாட்டத்துடன், உடல் நோவால் தவிக்கும் அந்த யானை பற்றிய தகவல்கள் கடந்த இரண்டு மூன்று தினங்களாக வனச்சரகரின் அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டும் அவர்கள் எட்டியே பார்க்கவில்லை.

 

யானையைத் தெய்வமாகப் பூஜிக்கும் மக்கள் அதன் நிலைமை கண்டு தங்களால் இயன்ற உணவை அளித்தும் அந்த யானை சாப்பிடவில்லையாம். இதனிடையே நேற்று மாலை மலைப்பகுதியிலுள்ள ஒரு தனியார் தோட்டத்தில் யானை இறந்து கிடந்தது பற்றிய தகவல் வனத்துறைக்குச் சொல்லப்பட்டு அதன் பிறகே ஸ்பாட்டுக்கு வந்த வனத்துறையினர் யானையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தனர். அதில் அந்த யானை 10 மாத நிறை கர்ப்பிணி எனும் அதிர்ச்சி வெளியானது மக்களை அதிரவைத்திருக்கிறது. ஒரு வாரத்திற்கும் மேலாக வதைபட்ட யானையை தகவல் வந்த உடனேயே வனத்துறையின் தேவையான ஏற்பாடுகளைச் செய்திருந்தால் யானை பிழைத்திருக்குமே என்று ஆதங்கப்படுகிறவர்கள் வனத்துறையினரின் அக்கரையற்ற அலட்சியமே யானை மரணம் என்று கொந்தளிக்கிறார்கள்.

 

ஆனால் வனச்சரகரான சரவணக்குமாரோ, நாங்கள் யானை வரும் வழியில் உணவு வைத்தோம். அது சாப்பிடவில்லை. செரிமானக் கோளாறு பல் நோய் என்று சொல்கிறார். பிரேதப்பரிசோதனைக்குப் பின்பு 220 செ.மீ. உயரமும், 15 வயதேயான அந்த யானை மணிமுத்தாறு வனப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்