Skip to main content

நான்கு நாட்களாக மின்தடை; இருளில் மூழ்கிய 50 மலைக் கிராமங்கள்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Power outage for four days; 50 hill villages plunged into darkness

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கேர்மாளம் மலைக்கிராமங்களுக்கு சத்தியமங்கலம், ராஜன் நகர்ப் பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களுக்கு திம்பம் மலைப்பாதை வழியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 4 நாட்கள் முன்பு ஆசனூர் அடுத்த மாவள்ளம் பிரிவு அருகே மின்கம்பி மீது மரம் விழுந்து மின்கம்பி துண்டிக்கப்பட்டது. இதனால் மின்சாரமும் தடைபட்டது. மலைக்கிராம மக்கள் அடர்ந்த வனப்பகுதியில் மின்சாரம் இல்லாமல் 4- வது நாட்களாக அவதிப்பட்டு வருகின்றனர்.

மலைக்கிராமங்களான கேர்மாளம், ஒசட்டி, காடட்டி, சுஜில்கரை, திங்களூர்,கோட்டமாளம், மாவநத்தம், பெஜலட்டி,காளிதிம்பம்,தடசலட்டி என 50 மேற்பட்ட மலைக் கிராமங்களில் மின்தடை ஏற்பட்டு உள்ளது .மின் தடையால் ஊராட்சிக்குச் செந்தமான மின் மோட்டார் இயக்க முடியாததால் குடிநீர் இல்லாமல் அவதிபட்டு வருகின்றனர்.மின் மோட்டார்களை இயக்க முடியாததால் அருகே உள்ள குட்டை மட்டும் ஆங்காங்கே பள்ளத்தில் தேங்கியுள்ள நீரை எடுத்து குடித்து வருகின்றனர்.

இதனால் வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் 3 நாட்கள் மின்சாரம் இல்லாததால் மாவநத்தம், தடசலட்டி, இட்டரை ஆகிய பகுதிகளில் குட்டை நீரைக் குடித்து வாந்தி, பேதி ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது நான்கு நாட்களாக மின்சாரம் இல்லாததால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட மின்வாரிய துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் 4 நாட்களாக எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவும், சத்தியமங்கலம் இருந்து கேர்மாளம் வரை உள்ள மின் கம்பிகள் மிகவும் பழைமையானதாக இருப்பதால் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாகக் கூறுகின்றனர். மின்கம்பியை சரி செய்து சீரான மின்சாரம் வழங்க வேண்டும் எனக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்