சனாதான அமைப்புகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆ.ராசாவுக்கு ஆதரவாக முதன்முறையாக கோவையில் போஸ்டர்கள் ஒட்டப்பட மாவட்ட அரசியலில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் முதல் நாரசிம்மநாயக்கன் பாளையம் வரை வரையில் மனுஸ்ருதி புத்தகத்தில் எழுதப்பட்ட கருத்தை நீலகிரி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக கழக துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா பேசியதை கண்டித்து பல்வேறு இந்து அமைப்புகள் கண்டித்து ஆர்ப்பாட்டம், கடை அடைப்பு போன்ற கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாநகர் மேற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் இந்து அமைப்புகளை கண்டித்து, ஆ.ராசாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டி சனாதான அமைப்பிற்கு பதிலடி கொடுத்துள்ளனர்.மாநகர் மேற்கு மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளர் பிரபாகரனால் அடிக்கப்பட்ட இந்த போஸ்டரில் மனுஸ்ருதி புத்தகத்தில் எழுதப்பட்ட கருத்தை குறிப்பிட்டு, ஆ.ராசா பேசியது தனது சொந்த கருத்தல்ல மனுஸ்ருதி புத்தகத்தில் உள்ளதை குறிப்பிட்டே பேசியுளாளார் என்பதனை விளக்கும் வகையில் போஸ்டர் அமைந்துள்ளது.
மேலும் இராசா மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைத்து அரசியல் செய்யும் சனாதான அமைப்புகளை கண்டிப்பதாக அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மாநகரில் மிகுந்த பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.