வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த ராமாலை கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. ஒன்றிய குழு கவுன்சிலராக இருந்தவரை தற்போது அதிமுகவின் வேலூர் கிழக்கு மாவட்ட மீனவரணி துணை செயலாளராக நியமித்துள்ளது கட்சி தலைமை. இதற்காக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ், மாவட்ட அமைச்சர் கே.சி.வீரமணி, தன்னை பரிந்துரை செய்த கிழக்கு மா.செ ரவி எம்.எல்.ஏ ஆகியோர் பெயர்களை போட்டு நன்றி அறிவிப்பு போஸ்டர் ஒட்டியுள்ளார் ராஜா.
இந்த நன்றி போஸ்டரில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ், வீரமணி, நிலோபர்கபில் படங்களோடு, குடியாத்தம் ஒன்றிய செயலாளர் ராமு படத்தையும் போட்டுள்ளார். இந்த போஸ்டரை பார்த்த ராமு, ராஜாவை தொடர்பு கொண்டு போஸ்டரில் எதுக்கு என் போட்டோவை போட்ட என கேட்டாராம். நீங்க ஒ.செ அதனால் போட்டேன் என இவர் சொன்னார். "என்னை கேட்காம ஏன் என்னுடைய போட்டோவை போட்ட என்று ஒருமையில் பேசினாராம் . இவரும் பதிலுக்கு ஒருமையில் பேசிக்கொண்டிருக்கும் போதே போனை சுட் செய்து விட்டாராம் ராமு.
கட்சிக்கான போஸ்டரில் அவரது போட்டோ போட்டதுக்கு என்னை அசிங்கமாக திட்டினார் ஒ.செ. எனக்கு 55 வயதாகிறது, 30 வருடங்களாக கட்சியில் உள்ளேன், ஆனால் மரியாதையில்லாமல் என்னை பேசிய ஒ.செ ராமு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கட்சியின் கிழக்கு மா.செ ரவிக்கு தனது லட்டர் பேடில் புகார் அனுப்பிவிட்டு காத்துள்ளார்.
நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் தலைமைக்கு செல்வேன் என்கிறாறாம். இது கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.