இந்தியாவில் இந்தி மொழித் திணிப்பு எண்ணெய் ஊற்றி வளர்க்கப்பட்டு வருவதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இருந்த ஒரு ஹேஷ்டேக் "இந்தி தெரியாது போடா" என்ற வாக்கியம். மத்திய அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக இளைஞர்களால் இந்தக் கருத்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டது. பிறகு, அதையே டீ - ஷர்ட்டில் ப்ரிண்ட் செய்து பிரபலங்கள் அணிந்து வந்தது, அந்த வாக்கியத்துக்கு மேலும் வலுசேர்த்தது. இந்நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தித் திணிப்புக்கு எதிராகக் கடுமையாகப் பேசியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், " இந்தியாவில் இந்தி மொழிவெறி எண்ணெய் உற்றி வளர்க்கப்படுகின்றது. தமிழ் உணர்வுடன் விளையாடாதீர்கள். சிறு பொறிகள் தீப்பிழம்பாக மாறிவிடும் பேரபாயம் ஏற்பட்டுவிடும். எனவே எச்சரிக்கையாக இருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.