கமலேஷ் சந்திரா ஊதியக் குழு அறிக்கையின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும், நடந்து முடிந்த தொழிற்சங்க உறுப்பினர் சேர்ப்பு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் உள்ளிட்ட இரண்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம், கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் நாடு முழுவதும் மாநிலத் தலைநகரங்களில் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 3 நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சலக வளாகத்தில் மாநிலத் தலைவர் எஸ்.ராமராஜ் தலைமையில் 2ஆவது நாளாக உண்ணாவிரதப் போரட்டம் நடைபெற்று வருகிறது.
கிராமப்புற உழியர்களாக மூன்றரை லட்சம் பேர் கடந்த 160 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்கள். கமலேஷ் சந்திரா தலைமையில் அமைக்கப்பட்ட ஊதியக் குழு அறிக்கை வெளியிடப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இதில் தபால் கணக்கு மாநிலத் தலைவர் பி.பரந்தாமன், மாநிலச் செயலாளர் ஆர்.பி.சுரேஷ், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் ஜெ.ராமமூர்த்தி, பொதுச் செயலாளர் எம்.துரைபாண்டியன், அஞ்சல் ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் ஜி.கண்ணன், கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் ஆர்.தன்ராஜ் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
படங்கள்: அசோக்குமார்