Published on 29/07/2018 | Edited on 29/07/2018

தற்போது கலைஞர் உடல்நலம் குறித்த மருத்துவ அறிக்கையை காவேரிமருத்துவமனை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், தொடர் சிகைச்சையின் மூலம் இயல்பு நிலைக்கான அறிகுறிகள் உள்ளன மேலும் தொடர்ந்து மருத்துவ குழு சிகிச்சை அளித்துவருகிறது எனக்கூறப்பட்டுள்ளது.
.

கலைஞருடைய உடல்நலம் குறித்த மருத்துவ அறிக்கைக்காக இன்று மாலை மழைப்பொழிவு ஏற்பட்ட போதிலும் தொண்டர்கள் கூட்டம் கலையாமல் காவேரிமருத்துவமனையின் முன் தொண்டர்கள் கூட்டம் குவிந்து இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டது அந்த அறிக்கையில், கலைஞரின் உடல் நிலையில் சிறிது தொய்வு ஏற்பட்டிருந்தது. தொடர் சிகைச்சையின் மூலம் இயல்பு நிலைக்கான அறிகுறிகள் உள்ளன மேலும் தொடர்ந்து மருத்துவ குழு சிகிச்சை அளித்துவருகிறது எனக்கூறப்பட்டுள்ளது.