Published on 08/10/2018 | Edited on 08/10/2018
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி வீரன் அழகுமுத்துக்கோன் பேரவையினர் தஞ்சை மாவட்ட எஸ். பி. யிடம் புகார் மனு கொடு்த்துள்ளனர்.
அந்த மனுவில், கடந்த மாதம் சங்கரன்கோயிலில் நடந்த நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் பேசிய சீமான், வீரன் அழகுமுத்துக் கோனை நக்கலாக பேசியுள்ளார். மேலும் நாங்கள் வழிபடும் கிருஷ்ணர் பற்றியும் தொடர்ந்து ஏளனமாக பேசிவருகிறார். அதனால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பேரவையின் மாவட்டத் தலைவர் பெரியகருப்பன் தலைமையில் தஞ்சாவூர் தெற்கு பகுதியை சேர்ந்த சிவவிடுதி, நெய்வேலி, இடையாத்தி , நரங்கியபட்டு, திப்பன்விடுதி, மேலஊரணிபுரம் என பல கிராம யாதவர்கள் சுமார் 150க்கும் மேற்பட்டோர் புகார் கொடுக்கச் சென்றனர்.