Published on 26/01/2019 | Edited on 26/01/2019
தமிழினத்தின் துரோகிகள்தான் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டுவார்கள் என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.
![pon radakirushnan](http://image.nakkheeran.in/cdn/farfuture/HDXQ3k5ray8ro5156G1zALC_iF0PrZ1btJM3pFwCKQk/1548527452/sites/default/files/inline-images/z16.jpg)
மதுரையில் பிரதமர் கலந்துகொள்ளவிருக்கும் விழா மேடையை பார்வையிட்ட பின் பேசிய அவர், உலகத்தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய உள்ளது. தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கொடி கருப்புக்காட்டுவது என்ற பெயரில் தமிழர் நலனுக்காக கருப்பு கொடி காட்டுவோம் என்று கூறினால் இவர்களைவிட தமிழனுக்கு விரோதி வேறு யாரும் இருக்க முடியாது. தமிழகத்திற்கு விரோதி இவர்களை விட யாரும் விரோதி இருக்க முடியாது. என்னுடைய வேண்டுதல் தயவுசெய்து இந்த கருப்புக் கொடி போராட்டத்தை கைவிடுங்கள் எனக் கூறினார்.