Skip to main content

பொங்கல் பண்டிகை; நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு

Published on 12/09/2023 | Edited on 12/09/2023

 

Pongal festival Train ticket booking starts from tomorrow 

 

பொங்கல் பண்டிகையையொட்டி நாளை முதல் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. 

 

2024 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி போகிப் பண்டிகையும், 15ஆம் தேதி தைப்பொங்கலும், ஜனவரி 16 ஆம் தேதி மாட்டுப்பொங்கலும், ஜனவரி 17ஆம் தேதி காணும் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்னதாகவே ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்ய ரயில்வே துறை ஏற்பாடுகளை செய்துள்ளது.

 

அதன்படி 2024 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி வியாழக்கிழமை ரயிலில் பயணம் செய்பவர்கள் நாளை (13.09.2023) முதல் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம். ஜனவரி 12 ஆம் தேதி பயணம் செய்பவர்கள் செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஜனவரி 13 ஆம் தேதி பயணம் செய்பவர்கள், செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். 


மேலும் ஜனவரி 14 ஆம் தேதி பயணம் செய்பவர்கள் செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஜனவரி 15 ஆம் தேதி பயணம் செய்பவர்கள் செப்டம்பர் 17 ஆம் தேதி முதலும், ஜனவரி 16 ஆம் தேதி பயணம் செய்பவர்கள் செப்டம்பர் 18 ஆம் தேதி முதலும் ஜனவரி 17 ஆம் தேதி பயணம் செய்பவர்கள் செப்டம்பர் 19 ஆம் தேதி முதலும் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. ரயில் டிக்கெட்களை ஐ.ஆர்.சி.டி.சி. (IRCTC) இணையதளத்திலும், ரயில்நிலைய டிக்கெட் கவுண்டர்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்