Skip to main content

பொங்கல் திருநாள்; புதிய போஸ்டரை வெளியிட்ட 'G.O.A.T' படக்குழு

Published on 15/01/2024 | Edited on 15/01/2024
Pongal festival; The team of 'G.O.A.T' released a new poster

நடிகர் விஜய் நடித்து வரும் அவரின் 68வது படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தில் விஜய் 2 வேடங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. சினேகா, லைலா, பிரசாந்த் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இதனையடுத்து விஜய் நடிக்கும் 68வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் (Greatest of All Time) என்று டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. மேலும் LIGHT CAN DEVOUR THE DARKNESS BUT DARKNESS CANNOT CONSUME THE LIGHT (இருளை ஒளியால் விழுங்க முடியும். ஆனால் இருளால் ஒளியை உட்கிரகிக்க முடியாது) என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, 'G.O.A.T' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் கடந்த 1 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது.  இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள், ரசிகர்கள் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது.

இந்த நிலையில், பொங்கல் திருநாளான இன்று (15-01-24) 'G.O.A.T' படக்குழு, பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில், நடிகர் விஜய் மட்டுமல்லாது நடிகர் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள். பொங்கல் திருநாளை முன்னிட்டு மற்ற நடிகர்கள் இடம்பெற்றிருக்கும் போஸ்டரை வெளியிட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் படத்தை பற்றிய எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்திருக்கிறது.

சார்ந்த செய்திகள்