புதுச்சேரி அரியாங்குப்பம் டோல்கேட்டை சேர்ந்தவர் நாகராஜ்(36). இவர் ஆசாரி வேலையுடன் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவருக்கு சூர்யா என்ற மனைவியும், புவியரசன், செம்மொழி இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த லோகு என்பவருக்கும், நாகராஜுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை நோணாங்குப்பம் பகுதியில் உள்ள மிடில் பள்ளி அருகே நாகராஜுக்கும், லோகு என்பவருக்கும் ஏற்பட்ட தகராறில் லோகுவும், அவரது நண்பர்களும் நாகராஜை சரமாரியாக வெட்டியுள்ளனர். அவரது முகத்தை வெட்டி சிதைத்துள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதில் நாகராஜ் படுகாயங்களுடன் உயிரிழந்தார்.

இதுபற்றி தகவலறிந்த அரியாங்குப்பம் போலீசார் உடலைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் கட்டப்பஞ்சாயத்தில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் விசாரணை செய்து வரும் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
