Skip to main content

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம்- எஸ்பி பாண்டியராஜன்

Published on 11/03/2019 | Edited on 11/03/2019

பொள்ளாச்சியில் முகநூல் மூலம் காதலிப்பதாக கூறி சுமார் 1000 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் வக்கிர கும்பலால் ஏமாற்றப்பட்டு பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட காணொளிகள் வெளியாகி பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் முக்கிய அரசியல் புள்ளிகளின் தலையீடு இருப்பதாக செய்திகள் வெளியாகி இன்னும் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

 

இந்நிலையில் கோவை போலீஸ் பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்,

 

sp pandiyarajan

 

இந்த வழக்கில் சபரீஷ், வசந்தகுமார்,சதீஷ் என்ற மூன்று பேர் கடந்த 25  ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு 5 ஆம் தேதியும்  கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் புகார்தாரரை மிரட்டிய செந்தில், நாகராஜ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில்  உள்ளனர்.  இந்த வழக்கில் அரசியல் கட்சி தலையீடு இல்லை. முக்கிய குற்றவாளிகள் நான்கு பேர் மீதும் குண்டர் சட்டதில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் 194 பி, 323, 324 மற்றும் 506 பார்ட் ஒன் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளின் கீழ் 7 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறை கிடைக்க வாய்ப்புள்ள பிரிவுகள் இது. நூறு சதவிகிதம் இதில் அரசியல் தலையீடுகள் கிடையாது. இந்த வழக்கின் விசாரணையில் நான்கு பேரை தவிர யாருக்கும் சம்பந்தம் இல்லை. தற்போது சம்பந்தப்பட்ட பெண்ணின் முகம் தெரியும்படி காணொளிகள் பரப்பப்பட்டு வருவது தடுக்கப்படும். விசாரணைக்கு தேவைப்படும் பட்சத்தில் பெண் அதிகாரிகள் இந்த வழக்கில் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. பணம் பறித்தது தொடர்பானது குறித்து புகார்கள் வந்தால் அதுதொடர்பான வழக்கும் பதிவு செய்யப்படும். 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த  வழக்கில் புகார் கொடுக்க வருபவர் ரகசியங்கள் காக்கப்படும் எனக்கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்