குமரி மாவட்டம், மார்த்தான்டம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் வில்சன். களியக்காவிளை காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் புதன்கிழமையான 08-ம் தேதி இரவு களியக்காவிளை சந்தைவழியில் இருக்கும் சோதனை சாவடிக்கு பணிக்கு சென்றார். அந்த சோதனை சாவடியில் மர்ம நபர்களால் அவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சனின் உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறுக்கு பிறகு சொந்த ஊரான மார்த்தாண்டத்துக்கு போலிஸ் மரியாதையுடன் எடுத்து செல்லபட்டது. அங்கு உறவினா்கள் கண்ணீா் மல்க அஞ்சலி செலுத்தியதையடுத்து போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் குடும்ப கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இதில் தெண்மண்டல ஐஐி சண்முகராஜேஸ்வரன், குமரி மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாத் உட்பட காவல் துறை அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா். இதற்கு முன்னதாக களியக்காவிளையில் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த தமிழக டிஜிபி திரிபாதி மற்றும் கேரளா டிஜிபி லோக்நாத் பெக்ரா ஆய்வுகளை மேற்கொண்டார். அதற்கு முன் திருவனந்தபுரத்தில் சந்தித்து பேசிய இருமாநில டிஜிபிக்களும் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை இணைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பேசினார்கள்.
பின்னா் களியக்காவிளையில் சந்தித்த இருவரும் கொலையாளிகள் என வெளியிடப்பட்ட குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டை சோ்ந்த அப்துல் சமீம் (27), இளங்கடையை சோ்ந்த தவ்பீக் (27) இருவரின் புகைப்படத்தை ஆய்வு செய்தனா். தொடா்ந்து சிசிடிவி காமிராவில் பதிவான கட்சிகளையும் ஆய்வு செய்தனா்.
அதன்பிறகு தமிழக டிஜிபி திரிபாதி வில்சனின் வீட்டிற்கு சென்று அவரின் மனைவி மற்றும் மகள்கள் உறவினா்களுக்கு ஆறுதல் கூறினார். இதற்கிடையில் கொலை செய்யபட்ட வில்சனின் குடும்பத்திற்கு தமிழக அரசு ஒரு கோடி ருபாய் வழங்க காங்கிரஸ் கட்சியினர் மார்த்தாண்டத்தில் மறியலில் ஈடுபட்டனா்.