Skip to main content

கரூரில் போலீசார் குவிப்பு; பாஜக அலுவலகத்துக்குப் பலத்த பாதுகாப்பு

Published on 14/06/2023 | Edited on 14/06/2023

 

 Police presence in Karur; Police security for BJP office

 

கடந்த எட்டு நாட்களாக நடந்த வருமானவரிச் சோதனை, 18 மணி நேரங்களுக்கு மேலாக நடந்த அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் குவிந்துள்ளனர். இதன் காரணமாக மருத்துவமனையில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை குறித்து பல்வேறு அமைச்சர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூரிலும் போலீசார் அதிகப்படியாகக் குவிக்கப்பட்டுள்ளனர். கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லம் உட்பட எட்டு இடங்களில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது. குறிப்பாக கரூர் பேருந்து நிலையம், கோவை சாலையில் உள்ள பாஜக அலுவலகம் ஆகிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருச்சி சரக டி.ஐ.ஜி சரவண சுந்தர் கரூரில் முகாமிட்டுள்ளார். மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் 500க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ரோந்து வாகனங்கள் தீவிரமான வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்