Skip to main content

ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி; த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்பு!

Published on 03/03/2025 | Edited on 03/03/2025

 

tvk party Leader Vijay participates Ramalan fasting opening ceremony 

ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஈகைப் பண்பையும் நல்லிணக்கத்தையும் போற்றும் புனித ரமலான் நோன்பு இஸ்லாமியப் பெருமக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, வரும் 7ஆம் தேதி (07.03.2025) மாலை, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடைபெற உள்ளது. 

இதில் கட்சித் தலைவர் விஜய், இஸ்லாமியப் பெருமக்களோடு கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். அதாவது சென்னை  ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் 7ஆம் தேதி (07.03.2025 - வெள்ளிக்கிழமை மாலை சரியாக  06.24 மணிக்கு நோன்பு திறக்கப்படும். மக்ஃரிப் பாங்கு மாலை. மணி 06.28 மணிக்கு நடைபெறும். மக்ஃரிப் தொழுகை மாலை 06.35 மணிக்கு ஒய்.எம்.சி.ஏ. அரங்கிற்குள் நடைபெறும். மக்ஃரிப் தொழுகை முடிந்ததும் கட்சியின் சார்பில் இஃப்தார் விருந்து நடைபெறும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்