
திருச்சி பொன்னேரிபுரத்தைச் சேர்ந்தவர் பெலிக்ஸ் (25). இவர் அப்பகுதியில் லோடு ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தபோது, வண்டியை வழிமறித்த மர்ம கும்பல் பெலிக்ஸ்சை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் முகம் முழுவதும் சிதைக்கப்பட்டும், கைவிரல்கள் துண்டிக்கப்பட்டும் சம்பவ இடத்திலேயே பெலிக்ஸ் உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், திருச்சி பொன்மலைப்பட்டி கடைவீதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சின்ராஜ் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
அந்தக் கொலை வழக்கில் கைதாகி தற்போது ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் அலெக்ஸ் என்பவரின் தம்பி இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. சின்ராஜ் கொலையுண்டு இறுதி சடங்கின்போது அச்சடிக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் ‘விரைவில்’ என்ற வாசகம் சூசகமாக இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. திருவெறும்பூர் போலீசார், வெட்டிப் படுகொலை செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர்.