விழுப்புரம் மாவட்டம், நெண்டியான்பாக்கத்தைச் சேர்ந்த ரமேஷ், கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த ஒரு வருடமாக, அங்குள்ள கடையில் குடும்பத்துடன் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். நவம்பர் 8 ஆம் தேதி இரவு 11 மணியளவில், கடை முன்பு உள்ள திண்ணையில் குழந்தையுடன் படுத்து தூங்கியுள்ளார். நாள் முழுவதும் வேலை என்பதால் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில் விடியர் காலை 3.30 மணியளவில் கண்விழித்து பார்த்த போது, தனது மூன்று மாதமேயான சஞ்ஜனா என்ற அந்த பெண் குழந்தை, காணவில்லை. பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காததால், கே-10 கோயம்பேடு காவல் நிலையதில் தனது குழந்தைபயைக் கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்திருந்தார். இந்தநிலையில் குழந்தையை கடத்திய கும்பல் குழந்தையை விற்க முயன்ற முயற்சி தோல்வி அடைந்ததால், குழந்தையை அம்பத்தூர் தொழில் பேட்டையில் விட்டு செல்ல முயன்றபோது சந்தேகத்தின் பெயரில் சிக்கிக்கொண்டனர்.
விரைந்து வந்து விசாரனை நடத்திய அம்பத்தூர் போலீஸ்சார், சந்தேகத்திற்கிடமானவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த நவம்பர் 9ஆம் தேதி ரமேஷ் என்ற கூலி தொழிலாளியின் குழந்தை கோயம்பேடு மார்க்கெட்டில் கடத்தப்பட்ட குழந்தை என்பது தெரியவந்தது. குழந்தையை கடத்திய ஆட்டோ ஓட்டுனர் பாபு அவரின் மனைவி காயத்திரி அவர்களின் மகன், மகள் மற்றும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த கணேஷ் மற்றும் செங்குட்டுவன் ஆகிய ஆறு பேரை கைது செய்து விசாணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த குழந்தையை விற்க ஏற்பாடு செய்த தரகராக செயல்பட்ட மருத்துவர் ஒருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.