திருச்சி மாநகரில் அரியமங்கலத்தில் உள்ள ராமலிங்கம் நகரில் அசன் அலி (24) என்பவர் அரசு அனுமதியோ, உரிய அரசு சான்றிதழோ இல்லாமலும், மருத்துவரின் ஆலோசனை கடிதம் இல்லாமலும் சட்ட விரோதமாக போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகளை விற்று வந்துள்ளார். இதனை தொடர்ந்து கடந்த மாதம் 26 ஆம் தேதி அரியாமங்கலம் போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் அசன் அலி மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 40 போதை மாத்திரைகள் மற்றும் ஒரு போதை மருந்து பாட்டிலையும் கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
மேலும் அசன் அலி தொடர்ந்து போதை மாத்திரை விற்று இளைஞர் சமுதாயத்தை கெடுக்கும் எண்ணம் உள்ளவர் என விசாரணையில் தெரிய வருவதாலும், அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு அரியமங்கலம் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, மேற்படி நபரை குண்டர் (மருந்து சரக்கு குற்றவாளிகள்) தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் மேற்படி குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும் சிறையில் அடைக்கப்பட்டார்.