Published on 22/05/2020 | Edited on 22/05/2020
காவல்துறை அவசர அழைப்பு 100 மற்றும் 112 தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 044-46100100 மற்றும் 044-71200100 என்ற எண்ணை மக்கள் தொடர்பு கொள்ளலாம்.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறால் செல்போனில் தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏர்டெல், வோடாபோன், ஐடியா நிறுவன போன் அழைப்பை ஏற்பதிலும் இடர்பாடு ஏற்பட்டுள்ளதால் தற்காலிகமாக 100 மற்றும் 112 மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.