ஆளுநர் மாளிகையின் புகாரை சரிவர கையாளவில்லை என சென்னை காவல்துறை கமிஷ்னர் ஏ.கே.வி. உள்ளிட்ட உயரதிகாரிகள் மீது ராஜ்பவன் கோபத்தில் இருப்பதையும், சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் சிலரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டுமென எடப்பாடி அரசிடம் ராஜ்பவன் வலியுறுத்தி வருவதையும் நேற்று பதிவு செய்திருந்தோம். ராஜ்பவனின் வலியுறுத்தல் குறித்து, உயரதிகாரிகளிடம் ஆலோசித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இது தொடர்பாக, சென்னை கமிஷ்னரிடமும் முதல்வர் விவாதித்ததாகத் தெரிகிறது. இதில், கமிஷ்னர் அதிருப்தியடைந்திருக்கிறார்.
இந்த நிலையில், திடீரென்று விடுமுறை எடுத்திருக்கிறார் கமிஷ்னர் ஏ.கே.விஸ்வநாதன். அவரது விடுப்பு, ஐ.பி.எஸ். வட்டாரங்களில் சத்தமில்லாமல் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . சென்னை காவல்துறையின் கூடுதல் கமிஷ்னர் (தெற்கு) மகேஷ்குமார் அகர்வாலிடம் கமிஷ்னர் பொறுப்பை கூடுதலாக கவனிக்க உத்தரவிடப்படும் என தெரிகிறது.