Skip to main content

'இது டிஜிட்டல் மயமாக்கல் அல்ல சுரண்டல்'-முதல்வர் கண்டனம்

Published on 30/03/2025 | Edited on 30/03/2025
'This is not digitalization, but exploitation' - Chief Minister condemns

மாதாந்திர வரம்பை தாண்டி ஏடிஎம்களில் பணம் எடுக்க 23 ரூபாய் சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'மத்திய அரசு அனைவரும் வங்கிக் கணக்குகளைத் திறக்க வேண்டும் வலியுறுத்தியது. பின்னர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்தது, #DigitalIndia-வை முன்னிறுத்தியது. அதைத் தொடர்ந்து என்ன நடந்தது? டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம், குறைந்த இருப்புக்கான அபராதம் என அறிவித்தது.

இப்போது ரிசர்வ் வங்கி வங்கிகள் மாத வரம்புக்கு மேல் ஏடிஎம் பணம் எடுப்பதற்கு ரூ. 23 வரை வசூலிக்க அனுமதித்துள்ளது. இது மக்கள் தங்களுக்குத் தேவையானதை விட அதிகமாக பணம் எடுக்கச் செய்யும், குறிப்பாக, ஏழைகளின் நிதி உள்ளடக்கத்தின் நோக்கங்களை மறுக்கும். இது டிஜிட்டல் மயமாக்கல் அல்ல. இது நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டல்' என தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்