Skip to main content

ஏலகிரி மலையில் பாலியல் தொழில்; 14 பேரை கைது செய்த போலீஸ்!

Published on 07/10/2024 | Edited on 07/10/2024
police arrested 14 people who engaged in wrongful occupation in Yelagiri Hills

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இதனால் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களில் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். தற்போது காலாண்டு விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலையில் குவிந்து வருகின்றனர். மேலும் சுற்றுலாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காக அரசு மற்றும் தனியார் தங்கும் விடுதிகள் உள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் வார விடுமுறையில் தனியார் விடுதிகளில் முன்கூட்டியே ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு ஓய்வெடுத்துச் செல்கின்றனர். 

இந்நிலையில் ஏலகிரி மலையில் உள்ள பல்வேறு தனியார் தங்கும் விடுதிகளில் வெளி மாநில பெண்களை தரகர்கள் மூலம் அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக திருப்பத்தூர் டிஎஸ்பி ஜெகநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நேற்று இரவு டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையில் போலீசார் அத்தனாவூர், நிலாவூர், கோட்டூர், மங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் தனியார் விடுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

police arrested 14 people who engaged in wrongful occupation in Yelagiri Hills

அப்போது படகு இல்லத்திற்கு செல்லும் பாதையில் உள்ள பி.எச் மற்றும் ஆர்யா நிலாவூர் சாலையில் உள்ள மூன்று தனியார் விடுதிகளில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 5 பெண்கள், ஹோட்டல் விடுதியின் மேலாளர்கள் உள்ளிட்ட 9 ஆண்கள்  என 14 பேரை போலீசார் கைது செய்து ஏலகிரி மலை காவல் நிலையம் அழைத்து வந்து  நேற்று மாலை முழுவதும் காவல் நிலையத்தில் காவல் நிலைய கதவை பூட்டி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனை அடுத்து சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த இந்திர சேனன் (43), நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (42), சௌந்தரராஜன் (42), ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்த மணி (36), கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த பார்த்திபன் (34), ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பகுதியை சேர்ந்த தனியார் விடுதி மேலாளர், சென்ராயன் (42), திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (32), வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன் பேட்டை பகுதியை சேர்ந்த தனியார் விடுதி மேலாளர் சூர்யா (28), ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதி சேர்ந்த ராஜீவ் (37) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி 9 ஆண்களைச் சிறையில் அடைத்தனர். மேலும் ஐந்து பெண்களை காப்பகத்தில் விட்டனர்.

police arrested 14 people who engaged in wrongful occupation in Yelagiri Hills

ஏலகிரி மலையில் தொடர்ந்து தனியார் விடுதிகளில் பாலியல் தொழில் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் டி.எஸ்.பியின் திடீர் சோதனையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்களையும் அதற்கு உடந்தையாகச் செயல்பட்டவர்கள் என 14 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் ஏலகிரி மலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சார்ந்த செய்திகள்