சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று ஒரு மர்ம போன் வந்தது. அதில் கொடைக்கானலுக்கு வரும் முதல்வர் எடப்பாடியை கொலை செய்வேன் என்று பேசிவிட்டு போனை கட் செய்துவிட்டார்.
இப்படி முதல்வருக்கு கொலை மிரட்டல் விட்ட நபர் யார் என போலீசார் ஆய்வு செய்தபோது தான் திமிரட்டல் விட்டது திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலக்குண்டு ஒன்றியத்தில் இருக்கும் விராலிப்பட்டி சேர்ந்த குருசங்கர் என தெரியவந்தது,. அதைத்தொடர்ந்து போலீசார் வத்தலகுண்டு காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்ததின் பேரில் குருசங்கரை போலீஸார் கைது செய்தனர்.
இது சம்பந்தமாக நாம் போலீஸ் தரப்பில் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன
முதல்வர் எடப்பாடிக்கு மிரட்டல் விட்ட விராலிப்பட்டியை சேர்ந்த குருசங்கரின் தந்தையான ராமமூர்த்தி விராலிப்பட்டியின் முன்னாள் அதிமுக ஊராட்சி செயலாளராக இருந்து வந்தவர் தற்பொழுது நடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் ராமமூர்த்தி தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டார். அதைத்தொடர்ந்து திமுகவுக்கும் தேர்தல் பணியாற்றினார்.
இந்த நிலையில்தான் ராமமூர்த்தியின் மகனான குருசங்கர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த 80ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டு கொடைக்கானல் சென்று உல்லாசமாக இருந்து வந்திருக்கிறான். இந்த விஷயம் தந்தை ராமமூர்த்திக்கு தெரியவே உடனே உறவினர்களுடன் கொடைக்கானலுக்கு சென்று தனது மகன் குருசங்கரிடம் இருந்த பணத்தை பிடுங்கிக் கொண்டு அவனை சத்தம் போட்டுவிட்டு வந்து விட்டனர்.
அப்பொழுது சிறிது நேரத்திலையே உறவினர்களுடன் ராமமூர்த்தி காரில் வந்து கொண்டிருக்கும்போது போதை இருந்த குரு சங்கரோ அந்த உறவினர் ஒருவருக்கு போன் போட்டு என்னை அடித்து பணத்தை பிடிங்கி கிட்டு போய்விட்டீர்கள் இதற்கு காரணமான இருந்த எங்க அப்பனை எப்படி பதறவைக்கபோகிறேன் என்று பாருங்க என்று கூறிஇருக்கிறான்.
அதை தொடர்ந்து தான் குருசங்கர் போதையில் சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் போட்டு எடப்பாடியை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியிருக்கிறான். அதைத்தொடர்ந்து போலீசார் ராமமூர்த்தியை பிடித்து வந்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் தான் கொடைக்கானலில் இறங்கி வத்தலக்குண்டு வந்த குருசங்கர் அங்கிருந்து திருப்பூருக்கு செல்ல பஸ்சில் சென்று கொண்டிருந்த விஷயம் போலீசாருக்கு தெரியவே கள்ளிமந்தயம் அருகே பஸ்சை மடக்கி குருசங்கரை கைது செய்தனர்.
இப்படி போதையில் குரு சங்கர் அப்பாவை மிரட்டுவதற்காக முதல்வர் எடப்பாடியை கொலை செய்வேன் என்று மிரட்டியதின் மூலம் தற்போது குருசங்கர் கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறான்.