Skip to main content

முள்ளங்கி சாம்பாரில் விஷம் வைத்து மாமியார், மாமனார் கொலை; ஒரு வருடத்திற்கு பின் சிக்கிய மருமகள்

Published on 24/05/2023 | Edited on 24/05/2023

 

poisoning radish sambar; A year later, the daughter-in-law was arrested

 

முள்ளங்கி சாம்பாரில் விஷம் வைத்து மாமனார், மாமியார் மற்றும் பக்கத்து வீட்டு சிறுவன் ஆகிய மூன்று பேரை மருமகள் கொலை செய்த சம்பவம் தொடர்பாக ஒரு வருடத்திற்கு பிறகு ஆண் நண்பருடன் மருமகள் கைது செய்யப்பட்ட சம்பவம் விருத்தாசலத்தில் நிகழ்ந்துள்ளது.

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்துள்ள இளங்கியனுர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி கொளஞ்சியம்மாள். இவர்களது மகன் வேல்முருகனுக்கு கீதா என்ற பெண்ணுடன் திருமணம் ஆன  நிலையில் இரண்டு மகன்களும் உள்ளனர். வேல்முருகன் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் தேதி கொளஞ்சியம்மாள் வீட்டில் முள்ளங்கி சாம்பார் வைத்துள்ளார். அதனை மாமனார் சுப்பிரமணியன், கொளஞ்சியம்மாள், பேரன் சரவணன் கிருஷ்ணன், பக்கத்து வீட்டைச் சேர்ந்த நித்தீஸ்வரன் என்ற சிறுவன் என 4 பேரும்  சாப்பிட்டுள்ளனர்.

 

அப்பொழுது திடீரென கொளஞ்சியம்மாளுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. தொடர்ந்து அவரது கணவர் சுப்பிரமணியனுக்கும் சிறுவர்களுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக கூத்தக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இருப்பினும் இதில் கொளஞ்சியம்மாள், சுப்பிரமணியன், பக்கத்து வீட்டு சிறுவன் நித்தீஸ்வரன் ஆகிய மூன்று பேரும் உயிரிழந்தனர்.

 

இது குறித்து மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஓராண்டுக்கும் மேல் நடத்தப்பட்ட விசாரணையில் வேல்முருகனின் மனைவி கீதாவிற்கு விருத்தாசலம் புதுக்குப்பத்தைச் சேர்ந்த 43 வயதான ஹரிகரன் என்பவருடன் முறையற்ற தொடர்பிருந்தது தெரியவந்தது. இதனை வெளிநாட்டிலிருந்த மகன் வேல்முருகனிடம் தாய் கொளஞ்சியம்மாள் கூறியதால் ஆத்திரமடைந்த மருமகள் முள்ளங்கி சாம்பாரில் விஷம் வைத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் தற்பொழுது கீதாவையும் அவருடன் முறையற்ற தொடர்பிலிருந்த நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்