வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களை காட்டு விலங்குகள் சேதப்படுத்துவது அடிக்கடி நடைபெறும் நிகழ்வுகளில் ஒன்று. அதிலும் குறிப்பாக காட்டு யானைகள் விளைநிலங்களை சேதப்படுத்துவதும், அதனை தொடர்ந்து வனத்துறை பிடித்து அடர்ந்த வனப் பகுதிகளில் யானையை விடுவதும் நீலகிரி, கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் தற்பொழுது வரை நீடித்து வருகிறது.
இந்நிலையில் கோவையில் விவசாய தோட்டத்துக்குள் நுழைய முயன்ற ஒற்றை குட்டி காட்டு யானையை விவசாயி ஒருவர் தூரத்தில் இருந்து அன்பாக சத்தம் எழுப்பி வனத்திற்குள் அனுப்பி வைத்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வெளியாகி உள்ளது.
கோவை தேக்கம்பட்டி பகுதியில் தன் தோட்டத்திற்கு யானை ஒன்று வருவதை அறிந்த விவசாயி ஒருவர் சிறிதும் அச்சம் கொள்ளாமல் ஏதோ தோழர்களிடம் பேசுவது போல் 'போ சாமி போ...' என கேட்டுக்கொள்ள, யானையும் சற்றும் தாமதிக்காமல் அவர் பேச்சுக்கேற்றார் போல அந்தப் பகுதியிலிருந்து கிளம்பி சென்றது தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.