Skip to main content

பெண் காவலருக்குக் கொலை மிரட்டல் விடுத்த பாமக நிர்வாகி!

Published on 19/05/2024 | Edited on 19/05/2024
pmk administrator threatened to kill the female police

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (38). பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகியான இவர், வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில்  பெண் காவலராக பணிபுரிந்து வந்த பிரியங்கா என்பவருடன் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் பெண் காவலர் பிரியங்கா கடந்த சில மாதங்களாக பாஸ்கருடன் பேச்சு வார்த்தையை தவிர்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த  பாஸ்கர்,  மீண்டும் தன்னுடன் பேசவில்லை என்றால், வேலை செய்ய விடாமல் செய்து விடுவேன், அதனால் நீ தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு உன்னை கொண்டு செல்வேன் என அவதூறான வார்த்தைகளால் பெண் காவலர் பிரியங்காவின்  செல்போனிற்கு  கொலை மிரட்டல் விடுத்து  குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியான பிரியங்கா இதுகுறித்து நாட்றம்பள்ளி காவல்நிலையத்தில் பாஸ்கர் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த நாட்றம்பள்ளி காவல்துறையினர் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகி பாஸ்கரை  கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சார்ந்த செய்திகள்