Skip to main content

காணொளி வாயிலாக செந்தில் பாலாஜியிடம் விசாரிக்கத் திட்டம்

Published on 15/06/2023 | Edited on 15/06/2023

 

Plan to interrogate Senthil Balaji through video

 

கடந்த எட்டு நாட்களாக நடந்த வருமான வரிச் சோதனை, 18 மணி நேரங்களுக்கு மேலாக நடந்த அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அமைச்சர்கள், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் நேற்று செந்தில் பாலாஜியை சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட முறையீடு, பிற்பகல் விசாரணைக்கு வந்தது. முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி மருத்துவமனை வளாகத்திற்கே சென்று விசாரணை நடத்தி 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

 

திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று பிற்பகல் 3:30 மணிக்கு விசாரணைக்கு வரும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கைது செய்யும்போது நிகழ்ந்தது என்ன என்பது தொடர்பாக செந்தில் பாலாஜியிடம் காணொளி வாயிலாக விசாரிக்க நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது. அவரிடம் காணொளி வாயிலாக நீதிபதி அல்லி விசாரிக்க உள்ளார். இதற்காக நீதித்துறை அதிகாரிகள் அவரை காணொளி வாயிலாக ஆஜர்படுத்த ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்