சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையம் இயங்கி வருகிறது. இங்கு வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டிலிருந்தும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அலையாத்தி காடுகளில் படகுச் சவாரி செய்து மகிழ்ந்து செல்வார்கள். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் கரோனா தொற்று பாதுகாப்பு கருதி கடலூர் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்படி சுற்றுலா மையம் மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுற்றுலா மையத்திற்கு யாரையும் அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் கடந்த 8 மாதத்திற்கு பிறகு, தற்போது 5 நாட்களாக சுற்றுலா மையம் இயங்கி வருகிறது. இதனை அறிந்து கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பிச்சாவரத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர். இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் படகு ஓட்டுனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், சுற்றுலா மையத்திற்கு உள்ளே வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலா துறையினர் உடலின் வெப்பநிலையை ஆய்வு செய்து கிருமி நாசினிகளை கொண்டு கையை சுத்தம் செய்த பின்னரே படகு சவாரி செய்ய அனுமதிக்கின்றனர். அங்கு கரோனா தொற்று முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.