பிசியோதெரபிஸ்ட் கிளினிக் தொடங்கி நடத்த குறைந்தபட்ச கல்வித் தகுதி நிர்ணயித்து அரசாணை ஒன்றை வெளியிட வேண்டும். சம வேலை சம ஊதியம் என்ற அடிப்படையில் மற்ற மாநிலங்களில் உள்ளவாறு மத்திய - மாநில அரசுத் திட்டங்களில் பணியாற்றும் பிசியோதெரபி மருத்துவர்களுக்கு குறைந்தபட்ச தொகுப்பூதியமாக ரூ. 35 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும். அரசு இயன்முறை மருத்துவக் கல்லூரி பெயர்ப் பலகைகளில் இடம் பெற்றுள்ள சிகிச்சை என்ற வடமொழிச் சொல்லை உடனடியாக மாற்ற வேண்டும்.
தமிழ்நாட்டில் செயல்படும் பிசியோதெரபி கல்லூரிகளின் பெயர்ப் பலகைகளில் மருத்துவ இயன்முறை மருத்துவக் கல்லூரி எனத் தமிழில் அழைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அறிவுறுத்தி ‘தி இந்திய பிசியோதெரபிஸ்ட் சங்கம்’ சார்பில் திருச்சி ஜங்ஷனில் மாநிலத் தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் பூர்ணிமா, இணை செயலாளர் ரமேஷ் குமார், ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள், டாக்டர்கள் ராஜ்குமார், பிரகாஷ், பாண்டுரங்கன், சரவணன், ஸ்ரீதர், கிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.