Skip to main content

தமிழகத்தில் செஞ்சுரி அடித்தது பெட்ரோல் விலை!

Published on 27/06/2021 | Edited on 27/06/2021

சில நாட்களாகவே நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில்,  தமிழகத்தில் பெட்ரோல் விலை தற்போது 100 ரூபாயை எட்டியுள்ளது.

 

தமிழகத்தில் 31 மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100  ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் ஐம்பது பைசாவிற்கு விற்பனையாகிறது. நீலகிரியில் 101 ரூபாய் 47 பைசா, கன்னியாகுமரியில் 101 ரூபாய் 43 பைசா, கடலூரில் 101 ரூபாய் 38 பைசா, திருவண்ணாமலை 101 ரூபாய் 12 பைசா, கிருஷ்ணகிரியில்101 ரூபாய் 8 பைசாவுக்கும், இப்படி காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், அரியலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், மதுரை, விருதுநகரில் நூறு ரூபாயை தாண்டி பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

சார்ந்த செய்திகள்