Published on 09/08/2021 | Edited on 09/08/2021

பெட்ரோல் விலை ரூ. 102.49 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. டீசல் ரூ. 94.39க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த மாதம்வரை தொடர்ந்து உயர்ந்துவந்த நிலையில், கடந்த 23 நாட்களாக எவ்வித மாற்றமும் இன்றி தொடர்ந்து ஒரே விலையில் விற்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டுவரும் நிலையில், தொடர்ந்து 23 நாட்களாக பெட்ரோல், டீசல் ஒரே விலையில் இருப்பது ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.