Published on 28/12/2020 | Edited on 28/12/2020

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அருகே செயல்படும் 'டாஸ்மாக்' கடையை இடமாற்றம் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு நீதிமன்றம் அருகே செயல்படும் 'டாஸ்மாக்' கடை தொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், இந்த 'டாஸ்மாக்' கடை குறிப்பிட்ட காலத்திற்குள் இடமாற்றம் செய்யவில்லை என்றால் மதுரை மாவட்ட ஆட்சியர் அந்த 'டாஸ்மாக்' கடையை மூடி சீல் வைக்க உத்தரவிட்டனர்.