Published on 19/04/2019 | Edited on 19/04/2019

ராஜபாளையம் யூனியன் அலுவலகம் அருகில் உள்ள திராவிடர் கழகத்தின் அலுவலத்தின் வாசலில் நிறுவப்பட்டுள்ள பெரியார் சிலை மீது, இரவோடு இரவாக காவி நிற பெயிண்ட்டை ஊற்றி சிலர் சென்றுள்ளனர். இது திராவிட இயக்க உணர்வாளர்களையும், இளைஞர்களையும், மாணவர்களையும் கொதிக்க வைத்துள்ளது. இந்த சம்பவத்தால் ராஜபாளையம் பதட்டம், பரபரப்பில் மூழ்கியிருக்கிறது. சமுக விரோதிகளின் இந்த செயலை பலரும் கண்டித்து வருகின்றனர்.
-நாடன்