Published on 10/04/2019 | Edited on 10/04/2019
திருவண்ணாமலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் பரப்புரையில் ஈடுபட்டார் அப்போது அவர் பேசுகையில்,

தமிழகத்தில் நல்லாட்சியை பார்த்தே நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. தற்போது நல்லாட்சி கொடுக்கவே நாங்கள் வந்துள்ளோம். விரைவில் இங்கே நல்லாட்சி மலரும். இங்கு கூடியுள்ள மக்கள் ஒரு நடிகனை பார்க்க வந்த மக்கள் அல்ல, மாற்றத்தை நோக்கி வந்துள்ள மக்கள். தமிழ்நாடு இந்தியாவின் தலைவாசல் ஆவது உறுதி என கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.