Skip to main content

குழப்பமே உன் பெயர் பெரம்பலூர் எம்.பி.தொகுதியா;ஒர் மீள் பார்வை !

Published on 21/03/2019 | Edited on 21/03/2019

பெரம்பலூர் எம்.பி.தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் குளித்தலை,இலால்குடி , மண்ணச்சநல்லூர் , முசிறி , துறையூர் (SC) , பெரம்பலூர் (SC) பெரம்பலூர் எம்.பி.தொகுதி தொகுதி சீரமைப்புக்கு முன்பு பெரம்பலூர் (தனி), உப்பிலியாபுரம் (தனி), வரகூர்(தனி), அரியலூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஆகிய 6 சட்ட சபை தொகுதிகள் இடம் பெற்றிருந்தது.

 

பெரம்பலூர் தொகுதியில் இருந்த ஜெயங்கொண்டம், அரியலூர் ஆகியவை சிதம்பரம் தொகுதியில் இணைக்கப்பட்டன. திருச்சி பாராளுமன்றத் தொகுதியில் இருந்த லால்குடி, முசிறி ஆகியவை பெரம்பலூர் தொகுதியில் சேர்க்கப்பட்டன. கரூர் பாராளுமன்றத் தொகுதியில் இருந்த குளித்தலை,பெரம்பலூர் தொகுதியில் இணைக்கப்பட்டது. முசிறி தொகுதியிலிருந்து மண்ணச்சநல்லூர் சட்டசபை தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டு அதுவும் பெரம்பலூர் தொகுதியில் சேர்க்கப்பட்டன .துறையூர்(தனி) தொகுதியும் பெரம்பலூர் தொகுதியில் சேர்க்கப்பட்டன. 

 

ELE

 

1951 ம் ஆண்டு முதல் 2004 வரை தனித்தொகுதியாக இருந்து மறுசீரமைப்புக்குப் பின் 2009 ஆண்டு பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது. இது வரை பெரம்பலூர் எம்.பி. தொகுதியில் இதுவரை எம்.பியாக இருந்தவர்கள். 

 

1951 - பூவராகசாமி படையாச்சி - டிஎன்டி

அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் தாலுக்காவை சேர்ந்த இவர் தமிழ்நாடு உழைப்பாளார் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 

 

1957 - எம். பழனியாண்டி -காங்கிரஸ்.

அவர் இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினராகவும் பின்னர் தமிழ் மாநில காங்கிரசு கட்சியில் உறுப்பினராகவும் இருந்தார். இவா் பத்தாம் வகுப்பு படிப்பை முடித்த பின், அரசியலில் நுழைந்து தொழிற்சங்கத் தலைவரானார். 1952 ஆம் ஆண்டு லால்குடியிலிருந்து சென்னை மாகாண சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1952 ஆம் ஆண்டு மற்றும் 1957 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பெரம்பலூர் எம்.பி.தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பழனியாண்டி 1957 முதல் 1962 வரை மக்களவையில் உறுப்பினராக இருந்தார்.1986 முதல் 1992 வரை அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். 1983 முதல் 1988 வரை இந்திய தேசிய காங்கிரசின் தமிழக குழுவின் தலைவர் ஆவார். 1996 ல் தமிழ் மாநில காங்கிரசில் ஜி.கே.மூப்பனாருடன் இணைந்தார். இவருடைய மனைவி எம்.புனிதவள்ளி திருச்சி மாநகராட்சியின் முதல் மேயர். 

 

1962 - இரா. செழியன் - திமுக

பெரம்பலூர் எம்.பி, எழுத்தாளர் எனப் பல தகுதிகளைக் கொண்டவர். பிறந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் திருக்கண்ணபுரம். சனநாயக உரிமைகளைப் பேணிக் காப்பதிலும் ஊழலுக்கு எதிரான முயற்சிகளிலும் ஈடுபட்டவர். மறைந்த அமைச்சர் நெடுஞ்செழியனின் தம்பி ஆவார். சிறுகதைகள், நாடகங்கள் எழுதியுள்ளார். 4முறை மேலவை உறுப்பினராக இருந்தார். என்பது குறிப்பிடதக்கது. 

 

1967 - அ. துரைராசு - திமுக 1971 - அ. துரைராசு - திமுக

இவர் தி.மு.க. சார்பில் பெரம்பலூர் பகுதியிலிருந்து போட்டியிட்டு வெற்றிபெற்றார். இவர் போட்டியிடும் போது பொதுத்தொகுதியிலிருந்து தனித்தொகுதியாக மாற்றப்பட்டது. 

 

1977 - அ. அசோக்ராஜ் - அதிமுக, 1989 - அ. அசோக்ராஜ் - அதிமுக, 

1991 - அ. அசோக்ராஜ் - அதிமுக

ஆகிய மூன்று முறை பெரம்பலூர் தொகுதியிலிருந்து எம்.பி. ஆனார்கள். 

 

1980 - கே. பி. எஸ். மணி - காங்.

கதிர்வேல் பால சுப்பிரமணி என்பவர் மேனாள் ராணுவ வீரர், சமூக சீர்திருத்தவாதியும் இவர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

 

1984 - எஸ். தங்கராசு - அதிமுக

இவர். அதிமுக சார்பில் வெற்றிபெற்றார். 

 

BB

 

1996 - ஆ. ராசா- திமுக, 1999 - ஆ. ராசா - திமுக, 2004 - ஆ. ராசா - திமுக

பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தில் பிறந்தவர், 3 முறை பெரம்பலூர் தொகுதியிலிருந்தும் 1 முறை நீலகிரி தொகுதியிலிருந்தும் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 

 

1998 - கபி. ராஜரத்தினம் - அதிமுக

தொடர்ச்சியாக 2 முறை திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால், அதற்கு ராஜாரத்தினத்தை அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 

 

BB

 

2009 - நெப்போலியன் - திமுக

தென்னிந்தியத் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியுமான இவர் கே.என்.நேரு, மற்றும் அவருடைய சகோதரர் ராமஜெயம் ஆகியோர் உதவியுடன். இவர் 2009 ஆம் ஆண்டு 15 வது மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய சமூகநீதி இணையமைச்சராகப் பொறுப்பு வகித்தார். தற்போது பிஜேபி கட்சியில் இருக்கிறார். 

 

2014 - ஆர்._பி._மருதராஜா - அதிமுக

இவர் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள, ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் இவர் அதிமுக சார்பில் வெற்றிபெற்றார். 

 

பெரம்பலூர் எம்.பி. தொகுதியில் 1951முதல் 2009 வரை நடந்த எம்.பி. தேர்தல்களில் தி.மு.க., 1962, 1967, 1971, 1996, 1999, 2004, 2009 ஆகிய எம்.பி. தேர்தலிலும், அ.தி.மு.க., 1977,1984, 1989, 1991, 1998 ஆகிய எம்.பி. தேர்தலிலும், காங்கிரஸ் கட்சி 1957, 1980 ஆகிய லோக்சபா தேர்தலிலும் வெற்றி பெற்றது.

 

இந்த தொகுதியில் 7 முறை தி.முக. வெற்றிபெற்றுள்ளது. 

 

15வது எம்.பி. தேர்தல் முடிவுகள்

21 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் டி. நெப்போலியன் அதிமுக சார்பில் கே. கே. பாலசுப்பரமணியனை 77,604 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.

 

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்

டி. நெப்போலியன் திமுக 398,742

கே. கே. பாலசுப்பரமணியன் அதிமுக 321,138

துரை காமராஜ் தேமுதிக 74,317

ஜி. செல்வராஜ் பகுஜன் சமாஜ் கட்சி 5,014

 

16வது எம்.பி. தேர்தலில் 

வேட்பாளர்    கட்சி    பெற்ற வாக்குகள்

ஆர்._பி._மருதராஜா    அ.தி.மு.க    4,62,693

சீமானூர் பிரபு    தி.மு.க.,    2,49,645

பாரிவேந்தர்    ஐ.ஜே.கே    2,38,887

ராஜசேகரன்    காங்    31,998

 

2019 எம்.பி. தேர்தலுக்கான கள நிலவரம் ! 

 

பெரம்பலூர் எம்.பி.தொகுதியில் தற்போது துறையூர், குளித்தலை, லால்குடி, சட்டசபை தொகுதிகள் தி.மு.க., வசமும் உள்ளது. பெரம்பலூர், மண்ணச்சநல்லூர், முசிறி, இந்த மூன்று தொகுதியும் அ.தி.மு.க. வசம் உள்ளது. 

 

EE

 

இரண்டு தனித்தொகுதிகளை கொண்ட இந்த தொகுதியில் முத்திரையர், தலித் என இரண்டு சமூகத்தினர் சம அளவில் உள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக ரெட்டியார், உடையார் என அடுத்தடுத்த வகையில் பிரிந்து இருக்கிறார்கள். 

 

கடந்த முறை அ.தி.மு.க. சார்பில் வெற்றிபெற்ற மருதைராஜீ்க்கு இந்த முறை வாய்ப்பு கொடுக்காமல், முன்னாள் அமைச்சரும் முதல்வர் இ.பி.எஸ்.க்கு மிகவும் நெருக்கமா மாப்பிள்ளை, மாமா என்று உறவுமுறை சொல்லி அழைத்துக்கொள்ளும் சிவபதிக்கு சீட்டு கிடைத்துள்ளது. கடந்த முறை பிஜேபி சார்பில் போட்டியிட்ட தோற்றுபோன பாரிவேந்தர் இந்த முறை உதயசூரியன் சின்னத்தில் நிற்பதால் கூடுதல் பலத்தோடு நிற்கினார். அமுமுக சார்பில் தொட்டியம் ராஜசேகரன் நிற்கிறார். 

 

BB

 

இவர் காங்கிரஸ் கட்சி, தமிழ்மாநிலகாங்கிரஸ், பிறகு அதிமுக தற்போது அமுமுக கட்சியில் நிற்கிறார். இவரும் முத்திரையர் சமூகம் என்பதால் சிவபதியும், இவரும் சரிசமாக ஓட்டுக்களை பிரிப்பதற்காக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். 

 

BB


 

ஆரம்பத்தில் பொது தொகுதியாகவும், பிறகு தனித்தொகுதியாகவும் பிறகு பொதுத்தொகுதியாகவும் மாறி மாறி தன்னை மாற்றிக்கொண்ட பெரம்பலூர் எம்.பி. தற்போது, பெரம்பலூர், திருச்சி, கரூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளை இணைத்து பெரம்பலூர் எம்.பி. தொகுதியாக மாறி இருப்பதால் தற்போது பெரம்பலூர் தொகுதி குழப்பமான சூழ்நிலையிலே இருக்கிறது. 

 

சார்ந்த செய்திகள்