Skip to main content

சொத்துக்காக இருவரை கொலை செய்த பெண்

Published on 24/06/2020 | Edited on 24/06/2020
Perambalur

 

 

பெரம்பலூர் மாவட்டம் அய்யலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 60 வயது ராணி. கணவரை இழந்த இவருக்கு வள்ளி (35 வயது), ராஜேஸ்வரி (32 வயது) ஆகிய இரு மகள்கள் உள்ளனர். அவர்களின் கணவர்கள் வெளிநாட்டில் வேலை செய்வதால் ராஜேஸ்வரி தாய் வீட்டிலும் வள்ளி 14 வயது மகனுடன் வேறு ஒரு வீட்டிலலும் வசித்து வருகின்றனர்.

 

கடந்த 19ஆம் தேதி இவர்களது தாயார் ராணி அவர் வீட்டில் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரது அருகில் அவர்கள் இளைய மகள் ராஜேஸ்வரி இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று ராணியை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். சேர்த்த சிறிது நேரத்திலேயே ராணியும் இறந்து போனார். போலீசார் இருவரது உடலையும் மருத்துவ பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர். சம்பவத்தை பார்த்த அவ்வூர் மக்கள் பலரும் குடும்பத் தகராறில் தாய் மகள் இருவரும் தற்கொலை செய்துகொண்டதாக கூறினார்கள். இது சம்பந்தமாக மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை செய்தனர்.

 

இந்த விசாரணையின் அடிப்படையில் சொத்துக்களை பிரித்துக்கொடுக்காத ஆத்திரத்தில் தாய் ராணியையும் சகோதரி ராஜேஸ்வரியையும் ராணியின் மூத்த மகள் வள்ளியும் அவரது 14 வயது மகனும் சேர்ந்து விஷம் கொடுத்தும் அவர்கள் கழுத்தை நெரித்தும்  கொலை செய்தது தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.நீதிமன்ற உத்தரவின் மூலம் வள்ளியை பெரம்பலூர் கிளை சிறையிலும் அவரது மகனை திருச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் சேர்த்துள்ளனர். சொத்துக்காக கொலை செய்த சம்பவம் அய்யலூர் பகுதி கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

 


 

சார்ந்த செய்திகள்