ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இளைஞர்கள் தமிழர்களின் பாரம்பரிய உணவை பின்பற்றுவோம் என்றும் அன்னிய பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என்று கூறினார்கள்.நாளைடைவில் தியேட்டர்,ஷாப்பிங் மால் என கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் பெப்சி, கோக் பயன்படுத்துவது நடைமுறைக்கு வந்தது.இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி முதல் தமிழகத்தில் அன்னிய பொருட்களான கோக், பெப்சி விற்பனை முற்றிலும் நிறுத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளையன் இதனை தெரிவித்துள்ளார். கோக், பெப்சி போன்ற வெளிநாட்டு பானங்களுக்கு பதில் உள்ளூர் பானங்கள், பதநீர், இளநீர், போன்றவை விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளார். வெள்ளையன் அவர்களின் இந்த அறிவிப்புக்கு சமூக நல ஆர்வலர்கள், இளைஞர்கள்,பொது மக்கள் என பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.