திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 19-ம் தேதி சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப் உள்ளடக்கிய 16 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கின.அதற்கடுத்த நாளே அண்ணா தொழிற்சங்க பேரவை தலைமையில் இயங்கும் கூட்டமைப்பு சார்பிலும் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதையடுத்து, பேச்சுவார்த்தைக்கு வருமாறு நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு தொழிலாளர் நலத்துறை அழைப்பு விடுத்தது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், ஜன.9-ம் தேதி வேலைநிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்தன. இதையடுத்து பேருந்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை தவிர்க்க அமைச்சர் சிவசங்கர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இது தொடர்பாக நிதித்துறையுடன் ஆலோசிக்க வேண்டியிருப்பதால் பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்பட்டது. அதன்பின் தொடர்ந்து இரண்டு முறை நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நேற்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது அதிலும் பேச்சு வார்த்தையிலும் உடன்பாடு இல்லாமல் தோல்வி அடைந்தது. இதனால் திட்டமிட்டபடி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்தில் சேலம் கோட்டம் மற்றும் விழுப்புரம் கோட்டம் ஆகிய இரு போக்குவரத்து பணிமனையில் உள்ளன. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் விழுப்புரம் மற்றும் சேலம் பணிமனையின் 5.00 மணி முதல் தற்போது நிலவரப்படி இதில் சேலம் கோட்டத்தில் மொத்தம் 64 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில் 49 புறநகர் பகுதிகளிலும் 20 நகர் பகுதிகள் ஆகும். அதில் தற்போது புறநகர் 11 பேருந்துகள் மற்றும் நகர் 4, 15 பேருந்துகள் சென்றுள்ளது. தற்போது வரை 25 பேருந்துகள் சென்று இருக்க வேண்டும். ஆனால் 15 பேருந்துகள் மட்டுமே சென்றுள்ளது.
அதேபோல் விழுப்புரம் பணிமனையில் இருந்து மொத்தம் 119 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில் 95 பேருந்துகள் புறநகர் பகுதிகளிலும் 24 பேருந்துகள் நகர் பகுதியில் இயக்கப்படுகின்றன. அதில் தற்போது புறநகர் 14 பேருந்துகளும் நகர் பகுதியில் 3 இயக்கப்பட்டுள்ளன. மேலும் தற்போது வரை 48 பேருந்துகள் சென்றிருக்க வேண்டும் ஆனால் 17 பேருந்துகள் மட்டுமே சென்றுள்ளது. தொழிற்சங்க கூட்டமைப்பினர் நாங்கள் பேருந்து உடைக்க மாட்டோம் வன்முறையில் ஈடுபட மாட்டோம் ஏனென்றால் பேருந்து எங்களுடைய சொத்து என கூறினர்.
பின்னர் அறிவிப்பு பலகையில் பேச்சுவார்த்தை தோல்வி வேலை நிறுத்தம் தொடங்கியது போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தமிழக அரசு நாமம் போட்டதாக கோவிந்தா என்னும் நாமத்தை வரைந்து உள்ளனர். பேருந்துகள் இயக்கப்படாததின் காரணமாக பயணிகள் வெளியூர் செல்ல முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் பயணிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.