ஈரோடு மாவட்டத்தில், அரசு சார்பான அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கம், பிப். 1ஆம் தேதி காளைமாடு சிலை அருகில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வமைப்பின் மாவட்டத் தலைவர் சங்கரன் தலைமையில் இந்தத் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில், அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகள் பின்வருமாறு,
‘புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்'
'சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம ஊழியர், வனத்துறை காவலர் மற்றும் ஊராட்சி எழுத்தர் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும்'
'அனைத்து வகை ஊழியர்களுக்கும் குடும்ப நல நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும்'
'மூன்று மாத காலமாக வழங்கப்படாமல் உள்ள குடும்ப நல நிதியை உடனடியாக வழங்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.