Published on 09/12/2018 | Edited on 09/12/2018
மீண்டும் ஒரு புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சியானது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறி புயலாக உருவெடுக்கலாம். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆனது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி டிசம்பர் 12ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளது.
அந்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் பட்சத்தில் இந்த புயலுக்கு ''பேய்ட்டி'' என்று தாய்லாந்து பெயர் சூட்டும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.