'மயில்களின் சரணாலயம் விராலிமலை' இந்த சொற்றொடரை பள்ளி புத்தகத்திலும், போட்டித் தேர்வு கேள்வித் தாள்களில் மட்டும் பார்க்க முடியும். உண்மையில் விராலிமலையில் மயில்களின் எண்ணிக்கை குறைந்து காணாமல் போவதுடன் இரையாக்கப்படுகிறது.
தண்ணீர், உணவு, காடுகள் பாதுகாப்பு இல்லாததால் மயில்கள் இடம் பெயரத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கிராமத்தில் தோட்டங்களில் இரை தேடி சென்றுவிட்டது. விளை பயிர்களை மயில்கள் அழிப்பதாக பல இடங்களில் விஷம் வைத்து கொல்லப்படுகிறது. பல நேரங்களில் இரை, தண்ணீர் தேடி செல்லும் போது வாகன விபத்துகளில் சிக்கி பலியாகிறது.
அதேபோல மயில்களை வேட்டையாடி கறிக்காகவும், மருந்துகளுக்காகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் போலிசார் வாகன சோதனையில் 3 உயிரற்ற மயில்கள் மற்றும் துப்பாக்கியை கைப்பற்றியதுடன் பொன்னமராவதி நகரப்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் (26), பெருமாள் (25), மூர்த்தி (26) ஆகிய 3 பேரையும் கைது செய்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.