சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் இன்று (13/08/2021) மாலை 05.00 மணிக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் துணை தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பேரவை கூட்டத்தொடரில் அ.தி.மு.க. எப்படி செயல்பட வேண்டும்? கூட்டத்தில் பங்கேற்பதா, வேண்டாமா என்பது குறித்தும், முன்னாள் அமைச்சர்கள் மீது போடப்படும் வழக்குகளை எதிர்கொள்வது குறித்தும் சட்டமன்ற உறுப்பினர்களுடன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியதாக தகவல் கூறுகின்றன.
சட்டப்பேரவையில் பட்ஜெட் உரையைப் புறக்கணித்து அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.