Skip to main content

ஆகஸ்ட் 7 இல் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

Peace rally led by Chief Minister M. K. Stalin on August 7

 

திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் 5 வது நினைவு நாள் ஆகஸ்ட் 7 அன்று அனுசரிக்கப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 7 அன்று அமைதிப் பேரணி நடைபெற உள்ளது.

 

இது குறித்து சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தகைமைசால் தலைவராக, எழுத்தாளராக, கவிஞராக, சொற்பொழிவாளராக,  திரைக்கதை வசனகர்த்தாவாக,  இலக்கியவாதியாக,  திரைப்படத் தயாரிப்பாளராக,  தலைசிறந்த நிர்வாகியாக, தமிழகத்தின் ஐந்து முறை முதலமைச்சராக, உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவரும், திராவிட இயக்கத்தின் போர்வாட்களில் ஒருவராகத் தமது பொதுவாழ்வைத் தொடங்கி, பின்னர் அறிஞர் அண்ணாவோடு திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடர்ந்து பணியாற்றி, அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் பொறுப்பு வகித்து, அகில இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்து, தமிழக வரலாற்றில் தமக்கென்று சில பக்கங்களை ஒதுக்கிக்கொண்டவர் கலைஞர்.

 

கலைஞரின் 5 வது நினைவு நாளினையொட்டி தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட கழக முன்னணியினர் கலந்து கொள்ளும் “அமைதிப் பேரணி”ஆகஸ்ட் 7  திங்கட்கிழமை அன்று காலை 8.00 மணிக்கு சென்னை, அண்ணா சாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலை அருகிலிருந்து புறப்பட்டு, காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்