
மே தினத்தையொட்டி ’கவியுலகப் பூஞ்சோலை’ முகநூல் குழுமத்தின் சார்பில் 100 கவிஞர்கள் பங்கேற்ற, ஒருநாள் கவிதைச் சாரல் விழா, தாம்பரம் எஸ்.ஜி.எஸ். திருமண மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது.

கவிஞர் அனுராஜ் வரவேற்புரை நிகழ்த்த, கவிஞர் கவிநிலவு தொகுப்புரை வழங்க, கவியரங்க முதல் அமர்வுக்கு கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் தலைமை ஏற்றார். மகளிர் மட்டும் பங்கேற்ற இரண்டாம் கவியரங்க அமர்வு, கவிஞர் வெற்றிமகள் சிவசங்கரி தலைமையிலும். அடுத்தடுத்த கவிதை அமர்வுகள் ராஜபாரதி, வீரபாண்டித் தென்னவன் ஆகியோர் தலைமையிலும் நடந்தது. நிறைவாக நடந்த கவிதை அரங்கிற்கு, பழ.நெடுமாறன் தலைமை ஏற்றார். கவிபாடிய கவிஞர்களுக்கு கவியருவி விருதுகளையும் பழ.நெடுமாறன் வழங்கிச் சிறப்பித்தார்.

முன்னதாக கவிச்சாரல் கவிதைத் தொகுப்பை ஆரூர் தமிழ்நாடன் வெளியிட, கவிஞர்களான கா.ந.கல்யாணசுந்தரம், வெற்றிப்பேரொளி போன்றோர் பெற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை கவிஞர் அன்புச்செல்வி சுப்புராஜ், கவிஞர் பாரதி பத்மா உள்ளிட்டோர் வரவேற்றனர். கோடையில் நாள் முழுக்க கவிதைச்சாரல், இதயங்களை நனைத்தது.
-இலக்கியன்